நடிகர் சத்யராஜின் தங்கை காலமானார்!! காங்கேயத்தில் இறுதிசடங்கு இன்று நடைபெறுகிறது!

 
நடிகர் சத்யராஜின் தங்கை காலமானார்!! காங்கேயத்தில் இறுதிசடங்கு இன்று நடைபெறுகிறது!

நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த தங்கை கல்பனா நேற்று மாலை காலமானார்.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் மகன் அர்ஜூன் மன்றாடியார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காலமானார். இவருடைய மனைவி கல்பனா மன்றாடியார்(66).

நடிகர் சத்யராஜின் தங்கை காலமானார்!! காங்கேயத்தில் இறுதிசடங்கு இன்று நடைபெறுகிறது!

இவர் நடிகர் சத்யராஜின் உடன்பிறந்த தங்கை ஆவார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு வருடமாக தனியார் மருத்துவமனையில் கல்பனா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனலிக்காமல் நேற்று மாலை கல்பனா உயிரிழந்தார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று காலை 10 மணிக்கு பழையகோட்டை சீரப்பள்ளம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இவரது மகன் ஏ.மகேந்தரை தான் நடிகர் சத்யராஜின் மகளான டாக்டர் திவ்யா திருமணம் செய்து உள்ளார்.

From around the web