செம அறிவிப்பு!! வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

 
செம அறிவிப்பு!! வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் உற்சாகப்படுத்தியுள்ளது.

செம அறிவிப்பு!! வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களில், சம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்களுக்கு என வாடிக்கையாளர்களுக்கேற்ப வட்டி விகிதம் மாறுபடும். மாத சம்பளம் வாங்குபவர்களை விட சம்பளம் அல்லாமல், தொழில் செய்பவர்களாக இருந்தால் பொதுவாகவே வட்டி விகிதம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கி.

செம அறிவிப்பு!! வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

எஸ்.பி.ஐ. வங்கியில், விழாக்கால சலுகையாக இனி புதிதாக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 6.7 சதவீதத்துக்கும் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த வட்டி விகிதம் எந்த தொகைக்கும் பொருந்தும் என தெரிகிறது.

செம அறிவிப்பு!! வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!

இதற்கு முன்னர். எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு ரூ.75 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு 7.15 சதவீதம் வட்டியாக இருந்தது. இந்த அதிரடி வட்டி குறைப்பின் மூலம் மாதந்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ. தொகையும் குறையும்.

வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பு மட்டுமல்லாமல் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு செயல் பாட்டு கட்டணத்தையும் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கி. எனினும் இந்த வட்டி சலுகைகள், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சிபில் ஸ்கோரினை பொறுத்தது என்று எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது. உங்களுடைய கடனைத் திருப்பி செலுத்தும் தகுதி, சம்பளம் வங்கியில் நேரிடையாக செலுத்தப்படுவது போன்றவைகளினால் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடனை எளிதில் பெறலாம்.

From around the web