2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்ட கலெக்டர்கள் திடீர் உத்தரவு!
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 21 ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இந்நிலையில், இன்று அக்டோபர் 23ம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. இதனால் கோவை ரயில் நிலையம், மருத்துவமனை சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, அவினாசி சாலை என பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு , வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!