இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... சிறப்பு வகுப்புக்கள் நடத்தக்கூடாது... கலெக்டர்கள் உத்தரவு!

 
school rain

 தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில்   கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சி  காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது.  இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதன்படி, தமிழகம்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி  நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

மழை

.அத்துடன் இன்றைய தினம் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். தேனி, தென்காசி மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு இன்று வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web