பள்ளி தாளாளர் கடத்தல்.. மூளையாக செயல்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேர் கைது!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி தாளாளர் செம்முனி (68), சித்தேரி பேரேரி புதூர் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை இனியவன் (41) என்பவரின் தாய் அமிர்தவல்லியிடம் ரூ.15 லட்சம் பெற்று பள்ளியை நடத்த ஒப்பந்தம் போட்டுள்ளார். மேலும், பள்ளியை நடத்தி வரும் லாபத்தில் 10 சதவீதம் தருவதாக உறுதியளித்துள்ளார். இப்பள்ளியில் தற்போது 101 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், செம்முனி பள்ளிக்கான அங்கீகாரம் பெறவில்லை.
அமிர்தவல்லி கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி தரவில்லை என தெரிகிறது. இதனால், ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அமிர்தவள்ளி, நவ.,18ல் புகார் அளித்தார்.ஆனால், செம்முனி விசாரணைக்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமிர்தவல்லியின் தரப்பினர் பாப்பிரெட்டிப்பட்டி சாய்பாபா கோவிலில் செம்முனியை தாக்கி ஆசிரியர் இனியவன் உள்பட 6 பேர் நேற்று காரில் கடத்தி சென்றனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சாய்பாபா அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சேலம் சாலையில் உள்ள புதுப்பட்டி சுங்கச்சாவடியில் காரில் கடத்தப்பட்ட செம்முனியை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் இனியவன், தீர்த்தகிரி, அம்பேத்குமார், சுரேஷ், மனோஜ்குமார், யசேந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!