பள்ளி வேன் சாலை தடுப்பில் மோதி விபத்து... மாணவர் படுகாயம்!
கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாணவர் படுகாயமடைந்தார், மேலும் ஐந்து மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேனில், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்தது. கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, ஓட்டுநர் மகேஸ்வரன் இயக்கிய வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், வேன் சாலையோர தடுப்பில் மோதியது.

காயமடைந்த மாணவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்ற மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்துக்குக் காரணம் பள்ளி வாகனத்தின் பராமரிப்பு குறைபாடே என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். “வாகனத்தின் டயர்கள் மோசமான நிலையில் இருந்தன; சரியான பரிசோதனை இல்லாததால் தான் விபத்து ஏற்பட்டது” என்று அவர்கள் கூறினர்.

மேலும், “மழைக்காலத்தில் வாகனங்கள் சீராக பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். பல தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சான்றிதழ் இல்லாமல் இயங்குகின்றன; இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
