பள்ளி வேன்–கார் மோதி விபத்து... ஒருவர் பலி, ஐவர் காயம்!

 
விபத்து
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாத்தூர் சாலையில் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை அழைத்துச் செல்லும் போது பெரிய விபத்து ஏற்பட்டது. வேனை கருப்பசாமி என்பவர் இயக்கியபோது, உதவியாளர் அய்யம்மாள் மற்றும் 10ஆம் வகுப்பு, 2ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் படிக்கும் இரண்டு மாணவர்கள் உடன் சென்றனர்.

விபத்து

அந்த வேன் மதுரை–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, நெல்லை நோக்கி வந்த கார் திடீரென எதிர்பாராதவிதமாக சாலையை கடந்து அதிவேகமாக வந்து வேனை மோதியது. அதில் வேன் மற்றும் கார் இரண்டின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. காரில் வந்த வள்ளியூரை சேர்ந்த ஷேக் என்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து

கார் ஓட்டுநர் அகஸ்டின், பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி, உதவியாளர் அய்யம்மாள், மேலும் இரண்டு மாணவர்கள் என மொத்தம் ஐவர் காயமடைந்தனர். தீயணைப்பு துறையினர் இரு வாகனங்களிலும் சிக்கியிருந்த ஓட்டுநர்களை மீட்டு, காயமடைந்தவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த ஷேக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவில்பட்டி மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!