ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

 
ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

உலகம் முழுவதுமே பயமுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடமாகவே மக்களின் அடிப்படை வாழ்க்கையைப் புரட்டி போட்டியிருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

பள்ளிச் சென்று பயிலும் மாணவர்கள் கடந்த இரு வருடங்களாகவே ஆன்லைன் மூலமாகவே கற்று வருகின்றனர். சமூக பழக்கங்கள், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வது, பிறருடன் பழகுதல் போன்ற வாழ்வியலின் அடிப்படையான விஷயங்களை அடுத்த தலைமுறையினர் கற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருவதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பல மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல மாநிலங்களில் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திய மாநிலங்கள் பாதிப்புக்களின் அடிப்படையில் தற்போது தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

தற்போது பள்ளிகளைத் திறக்கவும் பல மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 6ம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

From around the web