ரகசிய திருமணம்.. பதறிய பெற்றோர்... காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவி!
காதலனைத் திருமணம் செய்துக் கொள்வதற்காக வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது பள்ளி மாணவி, ரகசியமாக காதலனைத் திருமணமும் செய்துக் கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 28ம் தேதி இரவு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து சிறுமியின் தாய் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி, என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் செல்போன் எண்ணுக்கு அழைத்து பேசி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். இதில், புளியந்தோப்பு சிவராஜபுரத்தைச் சேர்ந்த விஷால் (21) என்பவரை சிறுமி காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனால் அவரை திருமணம் செய்து கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டு, கவுன்சிலிங் கொடுத்து, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்ததாக கூறி விஷால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!