கனடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்.. அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது இந்திய தூதரகம்!
கனடாவில் வாழ்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார், இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீது கனடா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கிடையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள், கனடாவில் உள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்குள் நுழைந்து பக்தர்களை தாக்கினர்.
இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தூதரக முகாம்களை ரத்து செய்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்க வேண்டும் திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய தூதரகம், “சமூக முகாம் அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை பாதுகாப்பு ஏஜென்சிகளால் வழங்க முடியாததால், திட்டமிட்ட சில தூதரக முகாம்களை ரத்து செய்ய தூதரகம் முடிவு செய்துள்ளது.
இதுபோன்ற இடையூறுகள் அனுமதிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. உள்ளூர் இணை அமைப்பாளர்களுடன் முழு ஒத்துழைப்புடன் எங்கள் தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்படும் வழக்கமான தூதரகப் பணிகளில், குடிமக்கள் உட்பட விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!