காந்தியுடன் காஃபி, ஹிட்லருடன் நூடுல்ஸ் ன்னு சொல்றவங்க எல்லாம் அரசியல்வாதின்னு வேற சொல்லிட்டு திரியுறாங்க.. சீமானை பங்கமாக கலாய்த்த அன்பில் மகேஷ்!

சமீபகாலமாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதனையடுத்து நாதக நிர்வாகிகள் பலர் கூண்டோடு விலகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரை பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சீமானை கலாய்த்துள்ளார். இது குறித்து அவர் நானும் ஒரு அரசியல் தலைவர் என சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவர் திரிந்து கொண்டிருக்கிறார்.
திருக்குறளை திருவள்ளுவர் எழுதிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஓலைச்சுவடியை கொடுத்தது நான்தான். ஹிட்லருடன் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளேன். காந்தியடிகளுடன் சேர்ந்து காபி குடித்தேன். சுபாஷ் சந்திர போஸ் பீரங்கி படையில் பயிற்சி கொடுத்துள்ளேன் என வாய்க்கு வந்ததை எல்லாம் அளந்துவிடுவார். அவருடைய பெயரை இங்கே சொல்லி என்னுடைய மரியாதையை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால் அவர் சொன்னது சீமானைத்தான். சமீபகாலமாக சீமான் பெரியார் பற்றிய சர்ச்சையாக பேசி வரும் நிலையில் அவர் பிரபாகரன் சந்தித்தது போட்டோ எடுத்தது எல்லாம் பொய் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை எனவும் அவருடன் இருப்பது போன்ற போட்டோவை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று ஈழத்தை சேர்ந்த போட்டோகிராபர் அமிர்தாஸ் சீமானை பிரபாகரன் சில நிமிடங்கள் மட்டும்தான் சந்தித்தார் எனவும் மற்றபடி அவர் பிரபாகரனை சந்தித்தது அசைவ உணவு சாப்பிட்டது எனக் கூறுவதெல்லாம் முற்றிலும் பொய் எனவும் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க