தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்... வைகோ புகழாரம்!
தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான். இனி ஒற்றுமையாக பயணிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பசும்பொன்னில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்கவிருந்த போது, அவ்விடத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அப்போது அவரை சீமான் வரவேற்றார். இருவரும் ஆரத்தழுவி அன்பை பரிமாரிக்கொண்டனர்.

இதையடுத்து சீமானை புகழ்ந்து வைகோ செய்தியாளர்களிடையே பேசியதாவது; இளையோர் உள்ளங்களில் புயல் வீசி வரும் செந்தமிழன் சீமானை பசும்பொன்னில் சந்தித்தது மகிழ்ச்சி. லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.

நான் மருத்துவமனையில் இருந்த போது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன். என் அம்மா இறந்த போது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார். இனி எங்கள் பயணம் தொடரும். ஒற்றுமையாக பயணிப்போம். சீமானின் முயற்சிகளும் வெற்றி பெறட்டும்” என்று பேசினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
