சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி... நாமக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளர் வினேத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 2009ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தோம் நாமக்கல் மாவட்டம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் அனைத்துக்கும் செலவு செய்து நடத்தி வந்தோம். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களாகிய நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் பல பேர் கட்சியில் இருந்து விலங்குவார்கள். சீமானின் செயல்பாடுகள் கொள்கை ரீதியாக இல்லாமல் இருக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை. நாங்கள் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை. ஆளுங்கட்சி அழுத்தம் எதுவும் எங்களுக்கு இல்லை. கட்சியில் இருந்து விலகியவர்கள் ஒருவரையும் சீமான் தொடர்பு கொள்ளவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக கட்சித் தலைமைக்கு எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், நான் எடுப்பது தான் முடிவு. இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்கிறார். அதனால் நாங்கள் வெளியேறுகிறோம்.
தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர் என்றார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!