புதுச்சேரிக்காக விஜய் குரல் கொடுத்தது மகிழ்ச்சி... சீமான் ஆதரவு!

 
சீமான் விஜய்
 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியின் மாநில அந்தஸ்து விவகாரத்தை முன்வைத்து ஆவேசமாகப் பேசினார். “30 வருஷமா என்னை தாங்கி நிற்கிற புதுச்சேரி மக்களுக்கு இந்த விஜய் குரல் கொடுப்பான். தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல; புதுவைக்கும் சேர்த்துதான்” என்று உறுதியளித்தார். 16 முறை தீர்மானம் அனுப்பியும் மாநில அந்தஸ்து தராத மத்திய அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.

தவெக விஜய்

“200 நாட்களாகியும் ஒரு அமைச்சருக்கு இலாகா இல்லை. டூரிஸ்ட் நகரமான புதுச்சேரியில் பார்க்கிங் இல்லை, கழிப்பறை இல்லை, ரேஷன் கடைகளும் இல்லை” என்று விஜய் சாடினார். “இந்த குறைகள் சரி செய்யப்பட வேண்டும். புதுவையில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்” என்று பேசினார். இந்த பேச்சு புதுச்சேரி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தவெக விஜய்

இதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்தார். “மாநில உரிமை வேணும்னு புதுச்சேரிக்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். அந்தக் கோரிக்கை வலுப்படும்படி விஜய் பேசியிருக்கிறார். இது மகிழ்ச்சி” என்றார். அதே நேரத்தில், விஜய் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பும் ஊடகங்களை சாடிய சீமான், “எல்லாத்தையும் விட்டுட்டு இவருக்கு சீட் எடுக்கனும்னு கிளி ஜோசியம் கேட்கிற மாதிரி கேட்காதீங்க” என்று கடுமையாக பதிலளித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!