பா.ம.க.வுக்கு எதிராக சாட்டை சுழற்றுகிறாரா செல்வராகவன்!! ஆரம்பமே அதகளமாக இருக்கு!!

 
பா.ம.க.வுக்கு எதிராக சாட்டை சுழற்றுகிறாரா செல்வராகவன்!!  ஆரம்பமே அதகளமாக இருக்கு!!

செல்வராகவன் கதையின் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்கிற மோகன் ஜி யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே கூடவே சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

பா.ம.க.வுக்கு எதிராக சாட்டை சுழற்றுகிறாரா செல்வராகவன்!!  ஆரம்பமே அதகளமாக இருக்கு!!

தமிழ் சினிமாவில் ‘கல்ட் க்ளாசி’ இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் செல்வராகவன், இயக்கிய படங்கள் ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட்டடித்து வந்தன. ஆனால், புதுப்பேட்டை படத்தில் இருந்து, அவரது படங்கள் விமர்சன ரீதியில் வெற்றி பெற்றாலும் கமர்ஷியலில் பெரிதாக சாதித்ததில்லை. அதன் பின்னர், இரண்டாம் உலகம் துவங்கி, அவரது சமீப படங்கள் விமர்சன ரீதியிலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது செல்வராகவன் தற்போது முழுநேர நடிகர் ஆகிவிட்டார் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன. தனுஷை வைத்து அவர் இயக்குவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. பல வருடங்களாக பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது.

அதற்கேற்றார் போல் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தில் கமிட்டாகியுள்ளார். அது தான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இயக்குநர் மோகன் ஜி, ருத்ர தாண்டவம் படத்தை தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதில் தனது அடுத்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கவுள்ள செய்தியை பகிர்ந்துள்ளதுடன், படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மோகன் ஜி படத்தில் செல்வராகவன் இணைந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மோகன் ஜி படங்கள் தொடர்ந்து பா.ம.க.வுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், செல்வராகவன் கதாபாத்திரம் பாமகவை வெச்சு செய்யும் கதாபாத்திரமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்துக்கு எதிராக எழுந்துள்ள பிரச்சனையையும் இத்துடன் தொடர்பு படுத்தி, ட்ரோல் செய்து வருகின்றனர்.

From around the web