செம மாஸ்... வெளியானது ரஜினியின் ‘வேட்டையன்’ ட்ரைலர்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், இன்று படத்தின் ட்ரைய்லர் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் படத்தின் ட்ரெய்லரை இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெய்லரை வைரலாக்கி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!