மாணவர்களே குறிச்சிக்கோங்க... அரையாண்டு தேர்வு அட்டவணை, விடுமுறை நாட்கள் பட்டியல் !
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்வழி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16 தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் எனவும், மீண்டும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்ததும் விடுமுறை டிசம்பர் 24 முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி 1 ம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை விடப்படும். அத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!