’ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்’.. இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த வங்கதேசம்!
வங்கதேசத்தில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடந்த மாணவர் போராட்டங்களை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத் தொடர்ந்து, வங்காளதேசத்திற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாதம் ஹசீனா மற்றும் 9 பேர் மீது இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.
இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவுக்கு திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு தூதரகக் குறிப்பு அனுப்பியுள்ளதாக வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சர் தவ்ஹீத் ஹொசைன், "நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு தூதரகக் குறிப்பை அனுப்பியுள்ளோம், அதில் ஹசீனா வங்காளதேசத்தில் நீதித்துறை நடவடிக்கைக்காக டாக்காவிற்கு திரும்ப வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக, வங்காளதேச உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம், ஹசீனாவை நாடு கடத்துமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு அவரது அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். 77 வயதான ஹசீனா, தனது 16 ஆண்டுகால ஆட்சியை கவிழ்த்து மாணவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!