பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பினார்!
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, டெல்லி மருத்துவமனையில் இருந்து 14 நாட்கள் சிகிச்சைகளுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வரும் அத்வானி, அவ்வப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 98.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏறக்குறைய 14 நாட்களுக்குப் பிறகு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த அத்வானியை நரம்பியல் நிபுணர் டாக்டர் வினீத் சூரி தலைமையிலான குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், ஜூன் 26ம் தேதி இரவு, திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அத்வானி அனுமதிக்கப்பட்டார்.
அவரை டாக்டர் அம்லேஷ் சேத் தலைமையிலான குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். அடுத்த சில நாட்களில் அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!