ஈரோட்டில் பரபரப்பு... விவசாயி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு... உறவினர்கள் சாலை மறியல்!

 
மோகன்லால்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே, கூலி தொழிலாளி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சுட்டுக் கொலைச் செய்ததாக சந்தேகப்படும் தலைமறைவான விவசாயியைப் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே விவசாயி ஒருவர் கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்த சபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்  உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நாகர்பாளையம், கிரிபள்ளம் தோட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்லால் (55). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் சந்தன மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மோகன்லால் தனது தோட்டத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. 

மறியல்

துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மோகன்லால் தோட்டத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அந்த இடத்தில் மோகன்லால் இல்லை. 

இது குறிடதது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் கோபி அருகே மொடச்சூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன் (50) என்பது தெரிய வந்தது. அவரது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. அதே சமயம் அவர் சடலமாக கிடந்த இடத்தில் அரிவாள் இருந்துள்ளது. இதனால் மோகன்லால், கண்ணன் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம். அப்போது மோகன்லால் துப்பாக்கியால் சுட்டத்தில் கண்ணன் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.

பள்ளி மானவி தற்கொலை

மோகன்லால் தனது பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. எனினும் கொலைக்கான முழுக்காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மோகன்லாலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கண்ணன் சுட்டு கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணனை சுட்டுக் கொன்றவரைக் கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். அவர்களை இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web