தேனியில் பரபரப்பு... வீட்டில் தனியே இருந்த பெண் மர்ம மரணம்!

 
லீலாவதி
கணவரைப் பிரிந்த நிலையில் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த  இளம்பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று லீலாவதி (33) என்கிற இளம்பெண் இறந்து கிடந்த நிலையில் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அல்லிநகரம் போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் லீலாவதியின் கணவர் சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அதன் பிறகு லீலாவதி தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்தது. மேலும் கவுசல்யா, பிச்சைமுத்து தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதன் காரணமாக கணவரை பிரிந்த கௌசல்யா, தேனியில் உள்ள தாய் லீலாவதி வீட்டில் தங்கியிருந்தபடியே ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் அடிக்கடி அல்லிநகரம் வரும் பிச்சைமுத்து, மனைவி கவுசல்யா மற்றும் மாமியார் லீலாவதியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், லீலாவதியை பிச்சைமுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web