தூத்துக்குடியில் பரபரப்பு... ஆசிரியர் கண்டித்ததால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி!

 
விஷம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த 4 மாணவிகள் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 90 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 4 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தற்போது காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் மாணவிகள் தேர்வில் புத்தகத்தைப் பார்த்து எழுதியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஆசிரியர்கள் மாணவிகளைக் கண்டித்துள்ளார்கள். 

மருந்து சீட்டு

இந்நிலையில் வழக்கமான நேரத்தை விட தாமதமாக சத்துணவு சாப்பிட சென்ற மாணவியை சத்துணவு ஊழியர் ஒருவரும் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவிகள் 4 பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு முன் அய்யனேரி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மருந்து கடையில் கொசு மருந்து வாங்கி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

கொசு மருந்து குடித்த சிறிது நேரத்தில் 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட, ஒரு மாணவி தனது பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொசு மருந்து குடித்த 4 மாணவிகளும் உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவில்பட்டி

மருத்துவமனை சார்பில் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web