செந்தில் பாலாஜி விடுதலை... திருப்பதி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

 
செந்தில் பாலாஜி

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று வெளியே  வந்தார் செந்தில் பாலாஜி.  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திமுக, செந்தில் பாலாஜி வழக்கில் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்து வந்த நிலையில், தற்போது திமுக தொண்டர்களிடையேயும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. நாளை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி !

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் எதுவும் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் செந்தில்பாலாஜியின் பெயரும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இவர் அளித்திருந்த ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.  

இந்த மனு மீதான விசாரணைகள் சுமார் 6 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று செப்டம்பர் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இந்த நிலையில், புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார். புழல் சிறைக்கு முன் திமுகவினர் திரண்டதால் திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழி நெடுகிலும் தொண்டர்கள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web