ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி தேர்தல் அறிக்கை ... பீகார் தேர்தலில் புதிய யுக்தியுடன் களமிறங்கும் காங்கிரஸ் !

 
பீகார்
 

 நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் சூழ்நிலை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தன் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆகியவை நேரடி மோதலில் உள்ளன.

காங்கிரஸ்

மேலும், பிரசாந்த் கிஷோர் தலைமையிலான "ஜன் சுராஜ்" கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றவுள்ளது.இந்நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி பீகார் மாநிலத்தில் 50 முதல் 55 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.

பீகார்

ஒரே மாநிலத்திற்குள் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் உள்ளதால், பொதுவான தேர்தல் அறிக்கையைவிட ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தீட்டியுள்ளது. இந்த அறிக்கைகள் மூலம், அந்தந்த தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வுக்கான வாக்குறுதிகள் விவரிக்கப்பட உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?