சிறுமி பாலியல் வன்கொடுமை... அதிமுக வட்டச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!!
சென்னையில் செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது அங்கு போலீசார் தரக்குறைவாக பேசியதாக பெரும் பரபரப்பு எழுந்தது. சிறுமியின் பெற்றோர் அதனை வீடியோவாக பதிவிட்டு இருந்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து, சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.
வெளி மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான புலனாய்வு குழு விசாரணையை கையில் எடுத்துக்கொண்டது.
விசாரணையில், கைதான இளைஞர் சதீஷ்க்கு உதவியதாக இருந்ததாக கூறி அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். சரியாக விசாரணை நடத்தவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் இன்ஸ்பெக்டர் ராஜியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சதீஷ், சுதாகர் இருவரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஜனவரி 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்ய அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!