இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. உதவி ஜெயிலருக்கு சரமாரி அடி உதை!
இளம்பெண்ணுக்கு உதவி செய்தவதாக கூறி பாலியல் தொல்லைத் தந்த உதவி ஜெயலருக்கு சரமாரியாக அடி விழுந்தது. மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வரும் பாலகுருசாமி என்பவரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் மதுரை ஆரப்பாளையம் அருகே நடுரோட்டில் பாலகுருசாமியிடம் பெண் ஒருவர் தகராறு செய்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டவர் மதுரையில் மகளுடன் சாலையோர உணவகம் நடத்தி வந்தார். அந்த கடைக்கு மதுரை மத்திய சிறையில் உள்ள உதவி ஜெயிலர் பாலகுருசாமி அவ்வப்போது உணவுக்காக வந்து செல்வார். கடைக்காரரின் மகளிடமும், உதவி செய்வதாகக் கூறிப் பேசியிருந்தார்.
இந்நிலையில் பாலகுருசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் பாலகுருசாமியை சாலையில் வைத்து தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!