இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்.... நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கைது!

 
நாம் தமிழர் சக்திவேல்
சென்னை கிண்டியில் ஐடி நிறுவனம் நடத்தி வருபவர் சக்திவேல்(42). இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில செயலாளராக உள்ளார். இந்நிலையில் கிண்டியில் உள்ள தனது ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் மேலும் 3 பெண்கள் சக்திவேல் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்த சக்திவேல் (42), கிண்டி மடுவன்கரை நரசிங்கபுரம் பிரதான சாலையில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் தாம்பரம், சேலையூரைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். 

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இந்நிலையில் தனது குடும்ப தேவைக்காக இளம்பெண், சக்திவேலிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை உல்லாசமாக இருக்க வரும்படி சக்திவேல் தொல்லைக் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு இளம்பெண் மறுத்த நிலையில், அவரை மிரட்டியதுடன், தான் கடனாக கொடுத்த ரூ.2 லட்சம் பணத்தையும் உடனடியாக திருப்பி தரவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

இதையடுத்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீசார், சக்திவேலிடம் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் இளம்பெண்ணை சக்திவேல் மிரட்டியது தெரிய வந்ததால் அவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது

அதே சமயம் சக்திவேல், தனது நிறுவனத்தில் பணிபுரியும் வேறு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா என  போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மேலும் 3 இளம்பெண்கள் சக்திவேல் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளனர்.

இதன் காரணம் சக்திவேலின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீசார் அவற்றை ஆய்வு செய்து வருகின்ற்னார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சக்திவேலால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் கொடுக்கும் பெண்களின் பெயர் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாது' என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web