மாணவிக்கு பாலியல் தொல்லை... தந்தை, மகன் கைது!

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

திருப்பத்துார் அருகே பள்ளி மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தந்தையையும், மகனையும் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர் பாலியல் ரீதியிலான புகார்களை மாணவிகள் தெரிவிப்பதற்காக புகார் பெட்டி ஒன்றை வைத்திருந்தார்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பள்ளியில் வைத்திருந்த புகார் பெட்டியில் கிடைத்த மனுவை பள்ளி தலைமையாசிரியை ஆய்வு செய்து வந்தார். அப்போது புகார் பெட்டியில் 10 வயது மாணவி ஒருவர், தன்னை இரண்டு பேர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் பலாத்காரம்

உடனடியாக இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை திருப்புத்துார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவகி விசாரணை நடத்தியதில் துவரங்குறிச்சியைச் சேர்ந்த ராசு (65) என்பவரும் அவரது மகன் முருகேசன் (38) ஆகிய இருவரும் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. தந்தை, மகன்  ஆகிய இருவர் மீதும் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து , கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web