மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... அடுத்தடுத்து பள்ளி முதல்வர், செயலாளர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!!

 
மது

மாணவிகளைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் நெஞ்சுவலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் மது குடிக்க

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு தூத்துக்குடிக்கு விளையாட்டுக்கு அழைத்து வந்த போது அறையில் வைத்து மது அருந்த கொடுத்து  பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை காவல்துறையினருக்கு புகார் அளிக்காமல் மறைக்க முயன்றதாக பள்ளி செயலாளர் செய்யது அகமது மற்றும் பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி ஆகியோரையும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

பொன்சிங்

இதில் கைது செய்யப்பட்ட பள்ளி செயலாளர் செய்யது அகமது மற்றும் பள்ளி முதல்வர் சார்லஸ் சுவீட்லி இருவருக்கும் காவல் நிலையத்தில் வைத்து திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்  மூலம் காவல்துறையினர் பாதுகாப்பு மூலம் அழைத்து வந்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிகிச்சை முடிந்த பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web