திருமண ஆசை காட்டி 21 ஆண்டுகளாக பலாத்காரம்.. ஏமாற்றிய 59 வயது நபர்.. கதறும் 36வயது இளம்பெண்!

 
பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்தாமணி சர்மா (வயது 59). இவர் பதோகியில் உள்ள மாவட்ட சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். சிந்தாமணி சர்மா லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் 36 வயதான செவிலியருக்கும் சிறுவயதில் இருந்தே தொடர்பு உண்டு.சிந்தாமணி சர்மா என்ற 36 வயது செவிலியர் சிறுவயதில் வாரணாசியில் வசித்து வந்தார். இருவரது குடும்பத்தினரும் ஒரே குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்.

பாலியல்

அதன்பின் சிந்தாமணி சர்மா செவிலியரின் குடும்பத்திற்கு பண உதவி செய்தார். அதுமட்டுமின்றி செவிலியரின் படிப்புக்கும் உதவி செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் நண்பர்களாக இருந்தனர். அப்போதிருந்து, அவர்களின் உறவு இன்னும் நெருக்கமாகிவிட்டது. சிறுவயதில் இருந்தே சிந்தாமணி சர்மா மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதனால் அவர் வெளியே பேசவில்லை.

சில வருடங்கள் கழித்து தனது திட்டத்தை மாற்றிய சிந்தாமணி சர்மா திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு செவிலியரை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் திருமணத்தை மறைத்து செவிலியரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையில் செவிலியருக்கு உண்மை தெரிய வந்தது.

கைது

இதுகுறித்து செவிலியர் கேட்டபோது, ​​சிந்தாமணி சர்மா அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது வீடு சூறையாடப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செவிலியர், சிந்தாமணி சர்மா தனக்கு திருமண ஆசை காட்டி 21 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்தாமணி சர்மாவை கைது செய்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web