அதிர்ச்சி... பெங்களூருவை தொடர்ந்து அஸ்ஸாமில் 10 மாத குழந்தைக்கு HMPV தொற்று!

 
HMPV  

சீனாவின் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவை அடுத்ததாக தற்போது  எச்.எம்.பி.வி எனும் புதிய வைரஸ்  பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

hmpv

சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எச்.எம்.பி.வி தொற்று இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.  இந்தியாவில் முதலில் பெங்களூருவில் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் திப்ருகார் மாவட்டத்தில் 10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அஸ்ஸாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ” எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது.

hmpv

புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும்” எனக் கூறியுள்ளார்.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web