அதிர்ச்சி... சிதம்பரத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!
சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையும், போதைப் பொருட்கள் விற்பனையும் கனஜோராக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர்கள் 20 வயதுக்கும் கீழுள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களாக இருக்கின்றனர். 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் பகுதியில் காரில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா கடத்தி வந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகரில் பகுதியில் காரில் எடுத்து வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார்  4 பேரை கைது செய்துள்ளனர். 

கஞ்சா கடத்தல்

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் காவல் நிலையத்துக்கு அண்ணாமலைநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா  கொண்டு  விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அண்ணாமலைநகர் ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள்  மணிகண்டன், பிரகாஷ், மோகன்ராஜ், ஸ்ரீதர்,ரமணி, கலைக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர்  இன்று(நவ.26)  இரவு மாரியப்பா நகர் பகுதியில் கண்காணித்த போது  அங்கு சந்தேகம் படும்படியாக நின்றிருந்த ஆந்திரா பதிவெண் கொண்ட சொகுசு  காரை சோதனை செய்ய முன்ற போது அதில் இருந்து ஓட முயன்ற தில்லைநாயகபுரத்தை சேர்ந்த சிவா மகன் சிக்கோ  என்கிற தமிழரசன்(22),  ஆந்திரமாநிலம், நெல்லூரை சேர்ந்த உதய பாஸ்கர்(60), சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்து என்கிற முத்துகிருஷ்ணன்(24), கோவிந்தசாமி தெருவை சேர்ந்த  ஐயப்பன் மகன்  டோலக்  என்கிற வினோத்(21) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரில்  இருந்து 20 கிலோ, 300கிராம் கஞ்சாவினை  காரில் எடுத்து வந்து, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

சிதம்பரத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

மேலும் 20 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.   பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ 5 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமைறைவாக உள்ள சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதி கஞ்சா விற்பனையாளர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web