அதிர்ச்சி... சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியான சோகம்!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை அம்ரேலி மாவட்டம் சித்ரசார் கிராமத்தில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் வேலை செய்து வந்த தனது பெற்றோருக்கு உதவி செய்வதற்காக 7 வயதுடைய சிறுமி ஒருவர் பருத்தி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது பருத்தி தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென சிறுமி மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜாப்ராபாத் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த ராஜுலா சட்டமன்ற உறுப்பினர் ஹிரா சோலன்கி, சிறுமியைத் தாக்கிய சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். வனத் துறையினர் 8 குழுக்கள் அமைத்து அப்பகுதியின் பல்வேறு இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!