மீண்டும் அதிர்ச்சி.. பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை!
திருச்சியில் நேற்று இரவு பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில், அவரது மனைவி ராகினிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதாவது, முன்விரோதம் காரணமாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொல்லப்பட்டதாக போலீசார் கூறினார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ஜம்புகேஸ்வரனை கைது செய்ய போலீசார் சென்றனர்.
அப்போது போலீசாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார்.இதனால், அவரை ஸ்ரீரங்கத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த ஜம்புகேஸ்வரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இன்று காலை ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரவுடிகள் திருவேங்கடம் மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் ஏற்கனவே போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில், ரவுடிகள் மீது அடுத்தடுத்து என்கவுன்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!