மீண்டும் அதிர்ச்சி... குளச்சலில் வங்கி ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளை முயற்சி!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற அஸ்சாம் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம் எந்திரங்களை உடைத்து தொடர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குமரி மாவட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் பல்பொருள் அங்காடி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்.மையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு இளைஞர் ஒருவர் புகுந்துள்ளார்.
அவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்காமல் நீண்ட நேரமாக உள்ளே இருந்தார். பின்னர மெஷினை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அந்த வழியாக காரில் சென்றவர்கள் பார்த்த நிலையில், அருகில் இருந்த மருந்து கடையில் உள்ளவர்களுக்கு இது குறித்து தகவல் கூறினார். அவர் உடனே குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று சேர்வதற்குள் இளைஞர் தப்பி அப்பகுதியில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனிக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். போலீசார் தேடிய போது ஐஸ் கம்பெனிக்குள் இருந்த அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர், அஸ்சாம் மாநிலம் நரயன்புர் பகுதியை சேர்ந்த பகர்தீன் அலி மகன் சம்சுல் அலி(22) என்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்சுல் அலி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்ன முட்டம் துறைமுகத்தில் மீன்பிடி வேலைக்கு வந்தவர் என்றும், தற்போது குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினர் ஒருவரை பார்க்க வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் அவர் ஏ.டி.எம்.மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து குளச்சல் போலீசார் சம்சுல் அலியை கைது செய்தனர். தொடர்ந்து சம்சுல் அலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதால் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள பல லட்சம் பணம் தப்பியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!