பயிற்சி மையத்தில் அதிர்ச்சி.. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஆசிரியர்.. பகீர் சிசிடிவி வைரல்!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் உயிரியல் ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீடியோவில், அவர் பயிற்சி மையத்திற்குள் ஒரு பெண் மாணவியுடன் மோசமான செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
कानपुर, यूपी में एक कोचिंग सेंटर है। इसके संचालक आशीष श्रीवास्तव को 2 दिन पहले एक लिफाफा मिला। उसके अंदर पेनड्राइव थी। पेनड्राइव देखी तो बायोलॉजी टीचर साहिल सिद्दीकी एक छात्रा से कोचिंग सेंटर के अंदर अश्लील हरकत करता दिखा। पुलिस ने साहिल को अरेस्ट किया। pic.twitter.com/4bgJmQ5O5f
— Sachin Gupta (@SachinGuptaUP) September 29, 2024
நீட் பயிற்சி மையத்தின் இயக்குநர் சித்திக், கான்பூரில் உள்ள காகதேவ் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி ஆசிரியர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சிசிடிவி வீடியோவில் வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் பயிற்சிக்கு வந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிடுவதைக் காட்டுகிறது. பின்னர் வகுப்பு நேரத்தில் கழிப்பறைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் காணப்பட்டன.
பயிற்சி மைய இயக்குனரின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய மத்திய கூடுதல் காவல் ஆணையர் மகேஷ் குமார், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!