அதிர்ச்சி... கை, கழுத்து அறுபட்டு தொப்புள்கொடியுடன் ரோட்டில் வீசப்பட்ட ஆண் குழந்தை!

 
குழந்தை
 

 

தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போதைப் புழக்கமும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இது குறித்து புலம்பி வருகின்றனர். 

குழந்தை

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் கை, கழுத்து ஆகியவை அறுபட்டு சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சிவகங்கையில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சாலையில் வீசி செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் குழந்தையை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web