அதிர்ச்சி... ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை.. தாய் உட்பட 3 பேர் கைது!
கோவையில் ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 3 பேர் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாமிசெட்டிபாளையம் சின்னக்கண்ணன் புதூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு 2 வயதில் ஆண்குழந்தை உள்ள நிலையில், நந்தினி மீண்டும் கர்ப்பமடைந்தார். பிரசவத்துக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தினிக்கு கடந்த 14ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், பெண் குழந்தையை நந்தினி ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு புகார் வந்தது. இதையடுத்து, சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் போலீசார் சாமிசெட்டிபாளையம் சென்று நந்தினியிடம் விசாரித்தனர்.
இதில், நந்தினி தனது பெண் குழந்தையை, கஸ்தூரிபாளையத்தில் உள்ள சத்யா நகரைச் சேர்ந்த தேவிகா(42) என்ற இடைத்தரகர் மூலமாக, கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மனைவி அனிதாவுக்கு(40) விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனிதாவிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார், இது தொடர்பாக நந்தினி, தேவிகா, அனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
''நந்தினி, தேவிகா, அனிதா ஆகிய 3 பேரும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். அனிதாவுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார். இந்நிலையில், நந்தினியின் குழந்தையை இடைத்தரகர் தேவிகா மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து அனிதா விலைக்கு வாங்கியுள்ளார். இடைத்தரகர் தேவிகா மூலம், இதே போல வேறு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்று விசாரித்து வருகிறோம்'' என போலீசார் கூறினர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா