அதிர்ச்சி.. பைக் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. தந்தை, மகன் பலியான சோகம்!

 
பெரியகுளம் விபத்து

தேனி பெரியகுளம் அருகே பைக் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சரக்கு வாகனத்தின் டிரைவர் தலைமறைவானதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர். பெரியகுளம், ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55), இவரது மகன் வீரமுத்து (30 வயது) ஆகியோர் தேனி நெடுஞ்சாலை - திண்டுக்கல் டி.வாடிப்பட்டி பிரிவில் நேற்று (ஜனவரி 1) அதிகாலை இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

விபத்து

அப்போது எதிரே ஒரு சிறிய சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது.  இதையடுத்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனமும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அவரை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொலை

இதற்கிடையே சரக்கு வாகனத்தின் டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த நிலையில், தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  புத்தாண்டு தினமான நேற்று தந்தை, மகன் இருவரும் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web