அதிர்ச்சி... குஜராத்தில் 35 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 7 பேர் பலி; 35 பேர் காயம்!

 
பேருந்து

குஜராத் மாநிலத்தில் பேருந்து 35 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 48 பேர், ஒரு பேருந்தில் பல மாநிலங்களில் உள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா சென்றனர். மகாரஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு, குஜராத்தில் உள்ள துவாரகாவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

பேருந்து

குஜராத்தின் டாங் மாவட்டத்தின் சாபுதாரா மலைப் பகுதியில் நேற்று காலை 4.15 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்பை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web