அதிர்ச்சி.. சரிந்து விழுந்த மின் கோபுரம்.. 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்!
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் 400 கிலோவோல்ட் மின் கோபுரம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் மாவட்டத்தின் அம்தாத் கிராமத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து சித்தி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா கூறுகையில், "பழைய மின் கோபுரங்களை மாற்றி புதிய மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு டவர் தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் அருகில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!