அதிர்ச்சி... மின்கம்பத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர் பலி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான் குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோவில் ராஜ் மகன் பிருத்திவிராஜ் (22.) இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டிலிருந்து அவரது பைக்கில் பேய்குளம். வந்தார் அப்போது எதிர்பாராத விதமாக பைக் நிலை தடுமாறியதில் அங்குள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் பிரித்விராஜ் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் காயமடைந்த பிரித்விராஜை. மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரித்திவிராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!