பெருந்துயரம்... காட்டுப் பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் துடிதுடித்து மரணம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு காளியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்மநபர்கள் காட்டுப் பன்றியை பிடிக்க மின்சார வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த லிங்கன் மகன் கரிபிரான் (65) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (40) மற்றும் அவருடைய மகன் லோகேஷ் (15) ஆகிய மூன்று பேரும் வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் பெருமாபட்டு பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது முருகன் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மூன்று பேர் உயிரிழந்ததை அறிந்து குருசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் முருகன் நிலத்தில் மின்சார கம்பிகள் அமைத்த நபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!