அதிர்ச்சி... கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை... ஐஜியிடம் நேரில் புகார்!

 
செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

தமிழகத்தில் சமீப காலங்களால பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி கல்லூரியின்  முதல்வர், தனக்கு பதிவாளர் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வருவதாக தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேற்று புகார் மனு அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ‘‘தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பதிவாளராக கடந்த ஜனவரி மாதம் ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கல்லூரி முதல்வர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்

சில நாட்கள் கழித்து பதிவாளர் ராமகிருஷ்ணன், அவருக்கு அருகே எனது போட்டோ இருப்பது போல போட்டோஷாப்பில் கிராப் செய்து, தினசரி எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என தொந்தரவு அளித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் எங்களது கல்லூரியில் சிபிஏ ஆய்வுக்கான சுற்றறிக்கையை வழங்கிய பதிவாளர், சிபிஏ ஆய்வுக்கான ஆய்வாளரை அனுப்பி வைத்து, அவர் மூலமாக ரூ.10 லட்சம் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தை வழங்கவில்லை என்றால், முதல்வர் பதவியில் இருந்து உங்களை நீக்கும் அளவிற்கு எனக்கு பவர் இருக்கிறது என்று மிரட்டினார். அதற்கு நான் மறுத்த நிலையில் பின்னர் நான் பணிபுரியும் கல்லூரி தாளாளர் மூலம் ரூ.10 லட்சத்தை பெற்றுள்ளார். மார்ச் 19ல் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி, உங்களை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்ய உள்ளோம் எனக்கூறி, அட்ஜஸ்ட் செய்யும்படி கூறி தொந்தரவளித்தார்.

குடும்ப வன்முறை பெண்கள் பாலியல் பலாத்காரம்

இதன் பேரில் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம், பதிவாளர் ராமகிருஷ்ணனின் நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தேன். எனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் பதிவாளர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார். நான் அளித்த பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை திரும்பபெற வேண்டும் என கூறி தொடர்ந்து பல்வேறு முறைகளில் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கல்லூரிகளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் எனது புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறான தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்’’ என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web