ஷாக்.. ஏசி சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து.. போராடி தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்!

திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் சர்வீஸ் செய்யும் கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் பாஸ்கர் என்பவர் இன்று காலையில் கடையை திறந்து விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடையில் மின்கசிவு ஏற்பட்டதில் திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த நான்கு சிலிண்டரில் ஒரு சிலிண்டர் வெடித்தது. இதனால் தீ கடை முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எறிந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கடையில் இருந்து வெடிக்காத மூன்று சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அகற்றி வெளியே கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் கடையில் இருந்த ஒரு சிலிண்டர் வெடித்து நெருப்பு தெருவின் மறு முனைக்கு பரவியதின் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து நாலா புறமும் சிதறி ஓடினர். மேலும் கரும்புகை ஏற்பட்டு அந்த பகுதியில் பரவியதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தீயை அணிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!