அதிர்ச்சி... மதுரையில் ரூ.8 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக வந்த இரு பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று கொழும்புவிலிருந்து மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரு பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில், அவர்கள் எடுத்துச் சென்ற இரண்டு பார்சல்களில் தலா 4 கிலோ என மொத்தம் 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.8 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்கராப்பள்ளியை சேர்ந்த காதர்ம மைதீன் (26) மற்றும் சென்னையைச் சேர்ந்த சாகுல் ஹமீது (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தாய்லாந்திலிருந்து கொழும்பு வழியாக கஞ்சாவை கடத்தி வந்ததாக சுங்க நுண்ணறிவு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
