அதிர்ச்சி! இலங்கையில் உடனடி அவசரநிலை பிரகடனம்!

 
அதிர்ச்சி! இலங்கையில் உடனடி அவசரநிலை பிரகடனம்!


உலகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார நிலையை சரிகட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நிலைமை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிர்ச்சி! இலங்கையில் உடனடி அவசரநிலை பிரகடனம்!

இலங்கையின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அன்றாட அவசிய தேவைகளும் கடும் விலைவாசி உயர்வை சந்தித்துள்ளன. சர்க்கரை, அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் அவசரகால விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி! இலங்கையில் உடனடி அவசரநிலை பிரகடனம்!


அங்குள்ள தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் உணவுப்பொருள் இறக்குமதியில் தீர்க்க முடியாத அளவு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி! இலங்கையில் உடனடி அவசரநிலை பிரகடனம்!


ஏற்கனவே வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வட கொரியாவில் பல பகுதிகளில் மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரே ஒரு வாழைப்பழம் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

From around the web