ரூ.2.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்... நியூ இயர் பார்ட்டியில் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வரவேற்ற நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக நேற்றைய புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விநியோகிப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.2.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு சொக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், குறிப்பாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சியு) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் தனிப்படையினர் அந்த இடத்தை சோதனை செய்து போதைப்பொருள் வைத்திருந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அந்த நபரின் வீட்டில் இருந்து ஹைட்ரோ கஞ்சா, மரிஜூவானா, எல்.எஸ்.டி உள்ளிட்ட சுமார் ரூ.2.50 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் பதுக்கல் தொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கஞ்சா, எம்.டி.எம்.ஏ., விற்பனையை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!