கோவையில் அதிர்ச்சி... வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் குழந்தை உட்பட 2 பேர் பலி!

 
யானை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடம்பாறை கிராமத்தில் நேற்றிரவு காட்டு யானை புகுந்து பச்சிளம் குழந்தை மற்றும் ஒரு பெண்ணை தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது.

பாக்கு தோட்டத்தில் புகுந்து பாகுபலி யானை நாசம்

கிராமத்து வீட்டிற்குள் புகுந்த யானை அங்கு உறங்கிக் கொண்டிருந்த அஞ்சலா (55) மற்றும் அவரது பேத்தியான ஹேமாஸ்ரீ (வயது 1½) ஆகியோர் மீது தாக்குதல் நிகழ்த்தியது. இந்த தாக்குதலின் போது பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அஞ்சலா படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டார். 

யானை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வனத்துறைக்கு தகவல் அளித்துவிட்டு, பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் யானையை விரட்டி அனுப்பியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?