அரசு பள்ளியில் அதிர்ச்சி.. பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில ஆசிரியராக சேரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக மாணவி தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆங்கில ஆசிரியர் சேரன் என்பவரை போளூர் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!